சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "Peace for Children" என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை மிகவும் தீவிரமாக கண்டித்து போராட்டங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் தனுது  ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.   அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண்ணொருவர் கைக் குழந்தையின்  கைகளை முறுக்கி அடித்து துன்புறுத்தி மேலிருந்து கீழே தூக்கிப் வீசுகிறார்.  அந்த பெண் குழந்தை கதறி அழுது கொண்டிருக்கிறது.

இதனை கண்டித்து லதா ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவொன்றை செய்துள்ளார். "அனைவரும் ஒரு நிமிடம் வீடியோவை பாருங்கள். குழந்தையை பெண்ணொருவர் ஈவிரக்கமின்றி அடித்து துன்புறுத்துகிறார். இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்களை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். இந்த வீடியோவில் உள்ள  பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தால் உடலே டோல் ஃப்ரி எண்ணை அழைத்து தொடர்பு கொள்ளவும்", என்று அவர் பதிவு செய்திருந்தார். 

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதள வாசிகள் அனைவரும் தங்களால் இயன்ற வரை பகிர்ந்து அந்தப் பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்து வருகிறார்கள்.