latha rajinikanth make pooja for tamilnadu

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் விசேஷ பூஜை நடத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 32 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமித்த பிறகு மாநில நிர்வாகிகள் நியமனம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு மே மாதம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. லதா ரஜினிகாந்த் கலந்துக்கொண்ட இந்த பூஜையை நடராஜா சாஸ்திரி இந்த பூஜையை செய்தார். 

இந்த பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் தமிழ் நாட்டின் நன்மை மற்றும் தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என இந்த யாகம் நடைபெற்றதாக கூறினார். 

புகைப்படங்கள்...