Asianet News TamilAsianet News Tamil

13 மாதமாக சம்பளம் வழங்காத லதா ரஜினிகாந்த்..! திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்..!

லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஷ்ரம் பள்ளி, சென்னை கிண்டியில் உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என அவர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Latha Rajinikanth has not been paid for 13 months salary for workers issue
Author
Chennai, First Published Sep 2, 2021, 4:43 PM IST

லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஷ்ரம் பள்ளி, சென்னை கிண்டியில் உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என அவர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் உயர்ந்த நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த், இவரது மனைவி லதா ரஜினிகாந்த், ஆஷ்ரம் என்கிற பள்ளியை நடத்தி வருகிறார். 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில், சுமார் 69 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் பல முறை இந்த கொரோனா கால கட்டத்தில் கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தங்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை கேட்டும் கொடுக்காத காரணத்தால் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். 

Latha Rajinikanth has not been paid for 13 months salary for workers issue

இதுகுறித்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறியபோது, "லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் பள்ளியில், கடந்த 25வருடங்களாக பணியாற்றி வருவதாகவும், எனது பனிக்காலம் முடிந்துவிட்டதாக கூறி என்னை பணியில் இருந்து நீங்குமறு பள்ளியின் மேலாளர் கேட்டு கொண்டார், எனவே நானும் எனக்கு சேரவேண்டிய ஊக்கத்தொகை,மற்றும் சம்பள பாக்கியை தருமாறு கேட்டு கொண்டேன்.

Latha Rajinikanth has not been paid for 13 months salary for workers issue

இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் அவர்களின் உதவியாளரை அணுகிய பொழுது நீங்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என்று கூறினார். எனவே நாங்கள் மீண்டும் பள்ளிக்கு பணிக்கு வர தொடங்கினோம். நாங்க தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும் கடந்த 13மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 4ஆண்டுகளாக ஊக்க தொகையும் போடவில்லை என தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Latha Rajinikanth has not been paid for 13 months salary for workers issue

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பல முறை கேட்ட போதும் இப்ப தறோம் அப்போ தறோம் என்று இழுக்கடித்து வருகிறார்கள், இப்பிரச்சனை குறித்து லதா ரஜினிகாந்திடம் முறையிட்ட போது, தன்னிடம் பணம் இல்லை சில சொத்துக்களை விற்று தான் தரமுடியும் என அவர் கூறியதாகவும், ரஜினிகாந்த் அவர்கள் நினைத்தால் ஒரு பொருட்டே இல்லை... ஆனால் அவர் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல மறுப்பதாகவும் தங்களின் இந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் லதா ரஜினிகாந்த் என ஊழியர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios