தங்களது இளையமகள் செளந்தர்யாவுக்குத் திருமணம் நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திருமணத்துக்குப் பாதுகாப்பு தருமாறு மனு அளிக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தார் லதா ரஜினிகாந்த்.

துவக்கத்தில் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்வதாக நடத்த்ப்படவிருந்த செளந்தர்யா-விசாகன் திருமணத்துக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பல வி.வி.ஐ.பி.களை அழைக்க ரஜினி குடும்பம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார்.

 அந்த மனுவில், வரும் 10-ந் தேதி அன்று எங்களது மகள் சவுந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளதால் இந்த கல்யாண விழாவில் மிக முக்கிய பிரபலங்களான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில் பிப்ரவரி 10-ந் தேதி மதியம் 3.10 வரை மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் என்றும், 12-ந் தேதி வரவேற்பு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.