தல அஜித்தின் மனைவி ஷாலினி ஷாப்பிங் செய்யும் போது குட்டி தலயை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் அஜித். தல என்று அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர். 

தல அஜித்துக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் செல்லும் இடம் எல்லாம் அவரது ரசிகர்கள் சூழுந்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக செய்துவருகின்றன. அவரது சின்ன நகர்வைக்கூட அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர் .

இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக் உடன் ஷாப்பிங் செய்ய வெளியே சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித்தின் மகன் கார் ஒன்றை எடுத்து ஷாலினியிடம் கொடுக்கிறார். 

அதைப் பார்த்த அவர் காரை வாங்கிக் கொடுக்காமல் மகனுக்கு செல்லமாக அட்வைஸ் கொடுத்து அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் தல அஜித் போலவே அவரது மகனுக்கும் கார் மீது ஆர்வம் அதிகமாகவுள்ளதாக கூறி அந்த விடியோவை தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகின்றனர்.