latest update about sarkar movie Varalakshmi is doing a negative role in sarkar
சர்கார் திரைப்படம் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அரசியல் கலந்த இந்த திரைப்படத்திற்கு, மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே விஜய் படம் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் சமீபத்தில் அதிரடி சரவெடி என வந்து திரையுலகை கலக்கி இருக்கும் மெர்சல் படம், விஜயின் அடுத்த படம் இதை விட ஒரு படி மேலே இருக்க வேண்டுமே…! என்ற எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.

சர்கார் திரைப்படத்தில் சரத்குமர் மகள் வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து வந்தது. தற்போது சர்காரில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியாகி இருக்கும் ஒரு செய்தி, அந்த சந்தேகங்களுக்கு விடை அளித்திருக்கிறது.

இந்த படத்தில் வரலட்சுமி ஒரு அரசியல்வாதியின் மகளாக நடித்திருக்கிறாராம். அதும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம். இதனால் வரலட்சுமி ஒரு திமிரான ரோலில் நடித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரோலில் அவர் வில்லியாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால், படையப்பா நீலாம்பரிக்கு பிறகு, மக்கள் மனதில் பதியப்போகும் அதிரடி வில்லி, வரலட்சுமி தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்பது, அதிகாரப்பூர்வமான தகவல் வந்தால் தான் தெரியும்.
