Daniel Balaji : பிரபல நடிகர் டேனியல் பாலாஜி கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி தனது 48வது வயதில் காலமானார். அவருடைய மறைவு, திரையுலகையே மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னையில் கடந்த 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி பிறந்த நடிகர் தான் டேனியல் பாலாஜி. இவர் பிரபல நடிகர் முரளி அவர்களுடைய உறவினர் ஆவார். நடிப்பு குடும்பத்திலிருந்து வந்த டேனியல் பாலாஜி, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீகாந்தின் "ஏப்ரல் மாதத்தில்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 

அதன் பிறகு மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க தொடங்கிய டேனியல் பாலாஜி, நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார். உலகநாயகன் கமலஹாசன், தளபதி விஜய் போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக இவர் நடித்திருக்கிறார். 

பாலிவுட் நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் 7 தென்னிந்திய நடிகர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

உடல்நல குறைவால் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி இவர் காலமான நிலையில் தற்போது அவருடைய நடிப்பில் உருவான ஒரு புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. "மின்மேன்" என்கின்ற திரைப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபுதேவா நடிக்க, சூப்பர் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Scroll to load tweet…

முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாகியுள்ள மின்மேன் படத்தின் அப்டேட் கடந்த ஏப்ரல் 3ம் தேதி பிரபு தேவாவின் பிறந்த நாளில் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது, இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to load tweet…

பிரவீன் சதிஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்கள் அமைத்தது பிரபல பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் திரைக்கு வருகின்றது.

நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் தாத்தா இந்த பிரதமரா.. அரச குடும்ப வாரிசு இப்படித்தான் நடிகை ஆனாரா..