பிரபல தொலைக்காட்சியில் பல்வேறு தொடர்களில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை நிலானி.  இவர் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் நிலானிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், சீரியல் இயக்குனர் லலித் காந்தியுடன் காதலோடு பழகி லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்துள்ளார். 

பணம் இருக்கும் வரம் காந்தியுடன் வாழ்ந்து வந்த நிலானி, பணம் தீர்ந்ததும் அவரை விட்டு பிரிய தொடங்கினார். காந்தி உண்மையாக அவரை காதலித்ததால், நிலானியை விட்டு பிரிய மனம் இல்லாமல் தொடர்ந்து அவரையே தேடி, தேடி, சென்று தன்னுடைய காதல் பற்றி புரியவைத்துள்ளார். 

இதே போல் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிலானி மயிலாப்பூர் பகுதில், படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, அங்கு சென்ற காந்தி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பியதாக தெரிகிறது. 

இதை தொடர்ந்து காந்தி, கேகே நகர் திடீர் என தன்னுடைய உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவரை மீட்டு அங்கிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதைத்தொடர்ந்து லலித் காந்தியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் நிலானியிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிலானியை நினைத்து 'musically ' ஆப் - ல் நிலானியை நினைத்து காதலுடன் மிகவும் சோகமான பாடலை பாடி பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவு இதோ...