"ஹாப்பி பர்த்டே திருநாவுக்கரசு".. விஷ்ணு விஷால் பிறந்தநாளில் டக்கராக வெளியான லால் சலாம் அப்டேட்!
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் விஷ்ணு விஷால் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நேரத்தில், லால் சலாம் படக்குழு அந்த திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடம் ஏற்று நடிக்கும் ஒரு திரைப்படம் தான் "லால் சலாம்". தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் தனது பகுதியை நடித்து முடித்து, இந்த படத்தின் இயக்குனரும் தனது மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை சொல்லி, பட குழுவிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் விஷ்ணு விஷால் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நேரத்தில், லால் சலாம் படக்குழு அந்த திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் சம்பந்தமான ஒரு திரைப்படம் தான் "லால் சலாம்" என்பதை நாம் அறிவோம், குறிப்பாக இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் பாணியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... ரஜினி ரசிகர்கள் அதிரடி அறிவிப்பு
வெளியாகியுள்ள தகவலின்படி இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் பெயர் திருநாவுக்கரசு. திருநாவுக்கரசு குமரன் என்பவர் கடந்த 1975ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர், ஐ சி எல் எனப்படும் இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகளில் இவர் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்குள்ள சில கிரிக்கெட் அகாடமிகளில் இவர் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய கதாபாத்திரத்தை தான் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஏற்று நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.