சர்ச்சைக்கு சற்றும் பஞ்சம் இல்லாத நடிகைகளின் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். எப்போதும் சமூக கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அதே போல் கடந்த சில வருடங்களாக இவர் தொகுப்பாளராக இருந்த ஒரு நிகழ்ச்சியும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பால் முடங்கி போய் உள்ளது. 

சாதாரண துணை நடிகையாக வெள்ளி திரையில் நுழைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது, இயக்குனர் தயாரிப்பாளர் என தன்னுடைய பரிமாணங்களேயே மாற்றிக்கொண்டுள்ளார். ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது நடிகை விஜியின் மகள் அறிமுகமாக உள்ள படத்தை இயக்கி வருகிறார். மேலும் சமீபத்தில் தலைதூக்கிய மீடூ பிரச்சனையிலும் சின்மயிக்கு ஆதரவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் லட்சுமி ராமக்ருஷணன் அப்பா நேற்று மரணம் அடைந்து விட்டாராம். எப்போதும் நம் வீட்டில் உள்ள ஒரு நபர் நம்மை விட்டு பிரிந்தால் அந்த பதிவு சோகமானதாக தானே இருக்கும். ஆனால் இதில் இருந்தும் தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு சந்தோஷமாக ஒரு பதிவை ட்விட் செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். 

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது " என் தந்தை சொர்கத்திற்கு சென்று விட்டார். இதன் மூலம் மீண்டும் என் அம்மா, அக்கா, அண்ணன் ஆகியோர் ஒன்று கூடியுள்ளோம். 97 வயதிலும் மிகவும் இளமையாகவும்... வலிமையான மனிதராகவும் இருந்தவர் என் தந்தை. வாழ்க்கையின் மொத்த சந்தோஷங்களையும் அனுபவித்த அவருடைய இறப்பை நாங்கள் அனுசரிக்க போவதில்லை கொண்டாட போகிறோம் என கூறியுள்ளார்.