Asianet News TamilAsianet News Tamil

லட்சுமி மேனனை ஆண்ட்டி போல் இருக்கீங்க என ஒதுக்கும் இயக்குனர்கள்...

lakshmimenon fat issue
lakshmimenon fat issue
Author
First Published May 21, 2017, 4:46 PM IST


நடிகை லட்சுமிமேனன் 15 வயதிலேயே 'கும்கி' படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, இவர் இரண்டாவதாக கமிட் ஆகி நடித்த 'சுந்தரபாண்டியன்' படம் வெளிவந்து வெற்றி பெற்றது.

lakshmimenon fat issue

இந்த படத்தை தொடர்ந்து வெளிவந்த 'கும்கி' படமும் மிகப்பெரிய ஹிட்  படமாக அமைந்ததால். 

இவருக்கு கிராமத்து பெண்ணாக பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. இதை தொடர்ந்து அவர் நடித்த படங்களும் மிதமான வெற்றியை பெறவே பல படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளருக்கு முன்வந்தனர்.

lakshmimenon fat issue

இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன், உடல் பெருத்து விட்டதாலும்   இவருடைய முகம் வெட்டுக்கள் மாறிவிட்டாலும்,  இவரை பல இயக்குனர்கள் படங்களில் நடிக்க வைக்க தயங்குகின்றனர்.

மேலும்  இவர் 'யங் மங் சங்' , 'சிப்பாய்', 'கொடிவீரன்' ஆகிய படங்களில் நடித்து வந்தாலும் புதிதாக எந்த ஒரு இயக்குனரும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மறுகிறார்களாம்.

lakshmimenon fat issue

பல இயக்குனர்கள் முதலில் உடம்பை குறைங்க, ஆண்ட்டி மாதிரி இருக்கீங்க என நேரடியாகவே கூறிவிட்டார்களாம். இதனால் தீவிரமாக உடலை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டு வருகிறாராம்  லட்சுமி மேனன்.

Follow Us:
Download App:
  • android
  • ios