Lakshmi Why we need to re think about how we see women on screen
பேயின் கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி ‘ஏ’யின் கையில் தமிழ் சினிமா சிக்கிக் கொண்டிருக்கிறது, இது ஆரோக்கியமான இளம் சமுதாய கட்டமைப்புக்கு சிக்கலானது என்பதை சமீபத்தில் நமது ஏஸியா நெட் தமிழ் இணையதளம் அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தது.
இந்நிலையில் ‘ஏ’ டைப் படங்களுக்கு இணையாக ‘வெப் சீரிஸ்’ எனும் புதிய சைத்தானும் தமிழகத்தை கலங்க வைக்க துவங்கியிருக்கிறது மெதுவாக. என்னதான் பெரிய தியேட்டரில் ஓடினாலும் கூட அந்த டைப் படங்களைப் பார்க்க செல்வதற்கு பொதுவாக ஒரு கூச்சம் நேரிடலாம். ஆனால் ‘வெப் சீரிஸ்’ என்பது மொபைலிலேயே கிடைக்கிறது. இலகுவாக விளக்குவதானால் ஒரு குறும்படம் தான். ஆனால் இதில் நடிப்பவர்களெல்லாம் பெரிய திரையிலோ, சீரியலிலோ நாம் பார்த்துப் பழக்கப்பட்ட ‘அட இவனா! அட இந்த பொண்ணா’ என்கிற மாதிரியான முகங்கள்.

தேசத்தின் பல மொழியிலும் வெப் சீரிஸ் படங்கள் இணையத்தில் அப்லோடாகின்றதான். ஆனாலும் தமிழ் வெப்சீரிஸ் படங்கள் பட்டாசு கிளப்பிக் கொண்டிருக்கின்றன. நல்ல படங்கள் கொடுத்த பெரிய இயக்குநர்களே அல்லது பெரிய இயக்குநரிடம் ஒர்க் செய்துவிட்டு தனிப்பட வாய்ப்பு தேடி அலையும் நபர்களே கூட போகிற போக்கில் வெப் சீரிஸில் ஒரு படத்தை இயக்கி தட்டிவிடுகிறார்கள். இதில் பெரும்பாலானவை ‘அந்த மாதிரி’டைப் படங்களாக இருப்பதால் சக்கைபோடு போட்டு வைரலாகின்றன.
சென்சார் பஞ்சாயத்துகள் எதுவுமில்லாத காரணத்தால் எந்த கட்டுப்பாடுமின்றி பாய்கிறது வெப்சீரிஸ் குதிரை. சமீபத்தில் இந்த லிஸ்டில் செம வைரலாகிக் கொண்டிருக்கிறது ‘லட்சுமி’ எனும் தமிழ் வெப் சீரிஸ் படம். குடும்பத்துக்காக வீட்டிலும், வேலைபார்க்கும் இடத்திலும் உழைத்துக் கொட்டுகிறாள் ஒரு ஏழை பெண். அவளது கணவன் உணவுக்கும், உடலுறவுக்கும் மட்டுமே அவளை பயன்படுத்துகிறான். ஆனால் அவனுக்கு வெளியிலும் ‘தொடர்பு’ இருக்கிறது. யார் அந்த பெண்? என்று கேட்டால், ‘உனக்கு அவளை தெரியாது’ என்று சிம்பிள் பதிலை சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

நான் மட்டும் என்ன மெஷினா, எனக்கும் உணர்வில்லையா? என்று நோகுபவள், தினமும் மின்சார ரயிலில் தன்னை பார்த்து ரசிப்பவனோடு ஒரு நாள் இரவில் அவன் வீட்டில் தங்குகிறாள். தன்னை தேவதை போல் தாங்கும் அவனுடன் படுக்கையையும் பகிர்கிறாள். இதுதான் மொத்த படமும்.
படத்தின் இறுதி நிமிடங்களில் பாரதியின் பாடல் ஒலிக்கிறது! அவளை புரட்சிகர பெண் என்பது போல் காட்டிச் செல்கிறது காட்சி நகர்வுகள்.
அப்ளாஸையும், விமர்சனங்களையும் ஒருசேர அள்ளிக் கொண்டிருக்கிறது இந்த வெப்சீரிஸ் மூவி.
சிநேகிதியை பற்றி விசாரிக்கும் மனைவியை ஒரு வரி பதில் மூலம் கடந்து சென்றுவிடலாம் என்றும், புருஷன் தன்னிடம் அன்பு செலுத்தவில்லையென்றால் தானும் தனி லைன் போட்டுக் கொள்ளலாம் என்பது போன்றும் வகுப்பெடுக்கிறதாக இந்த படத்தை கழுவி ஊற்றியபடியே மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் இணைய தமிழ் நேயர்கள்.
கணவனின் அவசர அவசர காம பசிக்கு அவள் இரையாகும் அந்த காட்சிகள் கத்திரி படாமல் அப்படியே வந்து விழுந்திருக்கின்றன! அம்மாடியோவ்...என்று அதிர வைக்கிறது.
ஜியோ தந்திருக்கும் வாய்ப்பால் பொழுதன்னைக்கும் நெட்டும் கையுமாக இருக்கும் இளசுகள் மட்டுமில்லாமல், வீட்டில் தனித்திருக்கும் குடும்ப பெண்களுக்கும் புதுப்பாடம் சொல்ல படையெடுத்து வருகிறது வெப் சீரிஸ்!
தாங்குமா தமிழ் கூறும் நல்லுலகம்?!
