lakshmi ramakrishnan refuses big boss opportunity
நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகைகளில் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஏற்கனவே மினி பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரிடம் 'பிக் பாஸ்'நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்குமாறு அணுகியுள்ளனர். இது குறித்து பேசியுள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், என்னுடைய குடும்பத்தை எப்போதும் நான் பிரிந்திருக்க மாட்டேன் அவர்களை பார்க்காமல் என்னால் இருக்கவும் முடியாது என கறாராக கூறிவிட்டாராம்.

அதேபோல் இந்த நிகழ்ச்சியாளர்கள் ஒருவரை அழைக்கும் முன் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டபின் அழைத்தாள் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், கடைசியாக நான் இயக்கி, தயாரித்து வெளிவந்த 'அம்மணி' படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதே போன்ற கருத்துள்ள படத்தை மீண்டும் தான் இயக்க தயாராகி வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.
