lakshmi ramakrishnan ask simbalarasan to support women

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ புகைப்படத்தை விமர்சித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு நடிகர் சிம்பு தொலைபேசியில் விளக்கமளித்துள்ளார்.

இயக்குனர் ஆதிக் சந்திரன் இயக்கத்தில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக தமன்னா நடிகிறார்.

ஜூன் 26 இல் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர் சமிபத்தில் இத்திரைபடத்தின் புகைப்படம் ஒன்றை நடிகையும் தொகுப்பாளருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்திருந்தார்

அந்த போஸ்டரில் சிம்பு முழு உடையிலும் தமன்னா அரைகுறை ஆடையுடன் இருப்பது போன்று இருக்கும். இது குறித்து ஏன் ஆண்கள் மட்டும் முழுதாக உடை அணிகின்றனர் பெண் நடிகைகள் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக இருகின்றார்? இதன் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது என்று விமர்ச்சத்திருந்தார்.

இதனை தொடர்ந்து சமூக தளங்களில் பல விவாதங்கள நடந்துவந்தது.

தற்போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சிம்பு தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்ததாகவும், பெண்களுக்கு எதிரான பல குற்றங்களை குறித்து அவர்கள் விவாதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அத்துடன் பெண்களை அவமதிக்கும் விதமாக நடக்கும் குற்றங்களை எதிர்த்து போராட சிம்புவை கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண்கள் குறித்து கொச்சையாக எழுதப்பட்ட “பீப்” பாடல் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சிம்புவிற்கு எதிராக அனைத்து பெண்கள் அமைப்பும் குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.