Asianet News TamilAsianet News Tamil

அபிராமிக்கு கண்ட்ரோல் செய்ய முடியாத வெறித்தனமாக ஆசை இருக்கு... பகீர் கிளப்பும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

கடந்த வாரம், சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த  25 வயது அபிராமி என்கிற பெண், தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய  இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றார்.

lakshmi ramakrishan speech for abirami
Author
Chennai, First Published Sep 9, 2018, 3:04 PM IST

கடந்த வாரம், சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த  25 வயது அபிராமி என்கிற பெண், தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய  இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றார். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குளாக்கியது. இதானால் இவரை வசைப்பாடாதவர்கள் யாருமே இல்லை என கூறலாம்.

lakshmi ramakrishan speech for abirami

இந்நிலையில் அபிராமியை பற்றி, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பல விதமான வாழக்கை சம்பவங்களை, பல மக்களை, அவர்களின் வாழ்க்கையை நடந்த பிரச்சனைகள் பற்றி பேசி நீதி கூறி வந்த நடிகையும், தொகுப்பாளினியுமான  லட்சுமி ராம கிருஷ்ணன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

இதில் எடுத்ததுமே , இதை தன்னால் நம்ப கூட முடியவில்லை , இயற்கையாகவே ஒரு தாய் தன்னுடைய குழந்தையை காப்பாற்ற வேண்டும் என மட்டும் தான் நினைப்பாள். அவர் குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவளாக இருந்திருந்தால் குழந்தையை பெற்று வளர்ந்திருக்க மாட்டாள். 

lakshmi ramakrishan speech for abirami

அபிராமி இப்படி நடித்து கொள்ள முக்கிய காரணம், ஒரு வேலை அவர் மன ரீதியாக தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால், தன்னுடைய மனதை கண்ட்ரோல் செய்ய முடியாத அளவுக்கு அபிராமி வெறித்தனமாக ஆசை பட்டிருக்க வேண்டும். தன்னுடைய சுயநலத்திற்காக ஆசை கண்ணை மறைத்து , குழந்தை மற்றும் கணவரை அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பொதுவாகவே கணவன் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறினார். எப்போதும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் உணர்வு இருக்க வேண்டும், ஈகோ போன்றவை தான் கணவன் மனைவி பிரிவிற்கு, முக்கிய காரணமாக இருக்கிறது. 

கணவன் தன் மீது, பாசம் இல்லாத, போது... மற்றொருவர் தன் மீது பாசம் காட்டும் நிலையில் அவர் மீது தானாக ஈர்க்கப்பட்டு பாசம் ஏற்படுகிறது என கூறினர்.

lakshmi ramakrishan speech for abirami

மேலும் தான் நடத்தி வந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மூலம் இது போன்ற பலரை பார்த்திருப்பதாகவும், அவர்களில் ஒரு பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லி, அந்த பெண் தன்னுடைய கள்ளகாதலனுக்காக கணவரை கொன்றதை தன்னிடம் ரகசியமாக வந்து சொன்னதாகவும் கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அதே போல் இதுவரை தான் பார்த்த பெண்கள் பலர், தன்னுடைய கணவரை கொலை செய்ய திட்டம் போட்டவர்களும், சில கணவர்கள் தன்னுடைய மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டவர்களுமே தவிர, குழந்தைகளை யாரும் கொள்ள வேண்டும் என நினைத்தது கூட இல்லை என்கிறார். ஆனால் அபிராமி என்கிற பெண் இப்படி செய்ததை தற்போது வரை தன்னால் நம்பவே முடியவில்லை என குமுறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios