நடிகையும் இயக்குனருமான லட்சமி ராமகிருஷ்ணன், பல வருடங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் குடும்ப சண்டைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிகழ்ச்சியை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தைரியமாக குடும்ப சண்டைகளை தொடர்ந்து தீர்த்து வைத்து கொண்டு இருக்கிறார் .

இந்நிலையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை வைத்து பலர் கிண்டல் செய்து வருகின்றனர், ஜிவி.பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியை ஸ்கூப் செய்வது போல் நடிகை ஊர்வசியை வைத்து காட்சி அமைத்தது , ஒரு பெரிய பிரச்சனையே கிளம்பியது... இதன் காரணமாக லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளத்தை விட்டே விலகினார்.

தற்போது இதே போல ஒரு காட்சி 'ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல என்னும் படத்திலும்' இடம் பெற்றுள்ளது இந்த காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனின் ரோலை ஏற்று நடித்துள்ளார் டாக்டர் ஷர்மிளா..

கண்டிப்பாக இந்த படத்தின் ட்ரைலர் பார்த்ததும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கண்டனத்தை தெரிவிப்பார்... ஒரு பிரச்சனை வெடிக்கும் என கூறப்படுகிறது என்ன சொல்லுவார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்