lakshmi ramakrishan said that she will go out of the tamil nadu emotionally
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
படம் முழுக்க இரட்டை அர்த்தங்கள் கொண்டதாக உள்ளதால், இது சமூக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் எனவும், இந்த படத்தின் மூலம் மக்களுக்கு சொல்ல வந்த கருத்து ஒன்றும் இல்லை
மேலும் முழுக்க முழுக்க ஆபாசத்தை கொண்டு உள்ளதாகவும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் பல எதிர் கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்
இதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கும் விதமாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன்....

"உங்களுடைய படத்தையும் என்னுடைய ஷோ வையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்க்கலாம் வாங்க....நீங்கள் என்னை அவமானம் படுத்துவதாக நினைத்து நிகழ்ச்சியில் பங்கு பெரும் நபர்களை கேவலப்படுத்துறீங்க...
வெளியில் எனக்கு மாலை மரியாதை அதிகமாக கிடைக்கிறது.
நீங்கள் என்னுடன் வாருங்கள்....மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என நேருக்கு நேர் சவால் விட்டு உள்ளார்...

அப்பொது மக்கள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ அல்லது என் மீது
குற்றம் சுமத்தினா, மக்கள் என்னை செருப்பால் அடிக்கட்டும் என எமோஷனலாக பேசி உள்ளார்.
மேலும், அன்றைய தினம் நான் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன்.. மீண்டும் வரவே மாட்டேன் என சவாலாக பேசி உள்ளார்.
இவருடைய இந்த பேச்சுக்கு மீண்டும் இயக்குனர் பதிலடி கொடுப்பாரா அல்லது அமைதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
