Lakshmi Menon in sadness
படிப்பு தான் ஃபர்ஸ்ட் நடிப்பு நெக்ஸ்ட் என்று அம்மா சொன்னதால் நடிக்க போக முடியல என்று வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை லட்சுமி மேனன்.
அஜித், விஜய் சேதுபதி என பல்வேறு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். சில வருடங்களுக்கு முன் பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தவர்.
ஆனால் நடுவில் அவர் குண்டாகி விட்டதால் ரசிகர்களால் தள்ளி வைக்கப்பட்டார். அதன் விளைவு படவாய்ப்புகள் சிறிது சிறுதாக குறைந்து ஃபேட் அவுட் ஆனார்.
அதனை அறிந்த லட்சுமி மேனன் தன் உடல் எடையை குறைக்க கடுமையாக முயற்சித்து வந்தார். தற்போது விடா முயற்சியால் தனது உடலை குறைத்து நடிப்பதற்கு தயாரானார்.
ஆனால் படத்தில் வருவதுபோன்ற டிவிஸ்ட் அவரது வாழ்க்கையிலும் வந்தது. ‘முதலில் படி அதற்கு பின்னர் நடிக்கப் போகலாம்’ என்று லட்சுமியின் அம்மா கூறிவிட்டாராம். இதனால் உடல் எடையை குறைத்தும் நடிக்க போக முடியவில்லையே! என்று வருத்தத்தில் இருக்கிறாராம் லட்சுமி மேனன்.
ஆனால், அவரது ரசிகர்கள் லட்சுமி நடிக்க வராததால் ஜாலியோ! ஜாலிதான்...
