இயக்குநர் மகிழ்திருமேணியின் முதல் படமான முந்தினம் பார்த்தேனே படத்தின் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை லெட்சுமி பிரியா சந்திரமவுலி. நாடகக் கலைஞராக இருந்து திரைத்துறைக்கு வந்த இவர், பல குறும்படங்களிலம், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

'சுட்ட கதை' படத்தில் ஹீரோயினாக ப்ரமோட் ஆன அவர், பிரேமம் புகழ் நிவின் பாலியின் 'ரிச்சி' படத்தில் 'நட்டி' நடராஜுக்கு ஜோடியாக நடித்தார். நயன்தாராவின் மாயா படத்திலும் அவருக்கு தோழியாக அவர் நடித்திருப்பார். 

இப்படி தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும், லெட்சுமியை புகழின் வெளிச்சத்துக் கொண்டிவந்தது 'லெட்சுமி' என்ற குறும்படம்தான். இதனை சர்ஜுன் கே.எம். இயக்கியிருந்தார். பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைப் பற்றி பேசிய இந்த குறும்படத்தில் லெட்சுமி என்ற கேரக்டரில் திருமணமான நடுத்தர குடும்ப பெண்ணாக லெட்சுமி பிரியா சந்திரமவுலி நடித்திருந்தார். 

சர்வதேச அளவில் பல விருதுகளை இந்த குறும்படம் வென்றிருந்தாலும், உடலுறுவு காட்சிகள் மற்றும் தவறான உறவு போன்றவை படத்தில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே, லெட்சுமி என்ற நடிகையை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எனலாம். 

இந்த குறும்படத்தின் மூலம் புகழ்பெற்ற லெட்சுமி, சத்தமே இல்லாமல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். பிரபல எழுத்தாளர் வெங்கடராகவன் ஸ்ரீனிவாசனை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணனின் சுயசரிதையான "281-அப்பால்"உட்பட பல கதைகளை எழுதியவர்தான் வெங்கடராகவன் ஸ்ரீனிவாசன். மிகவும் ரகசியமாக நடந்த நடிகை லெட்சுமியின் திருமணம், தற்போது மீடியாக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..