உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், அடுத்த மாதம் 4 ஆம் தேதி துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றி அடுக்கடுக்கான பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

ரம்யா பாண்டியன், ஷிவானி, ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அவர்களை ஸ்டார் ஓட்டலில் தனிமை படுத்த பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் நடிகை லட்சுமி மேனன் பெயரும் அடிபட்டது. ஆனால் அதற்கு அவர் ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருந்தார்.

ஆனால் மீண்டும் மீண்டும், சிலர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக கூறியதால்,  கடுப்பான லட்சுமி மேனன் மிகவும் கார சாரமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக தொடர்ந்து வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். எச்சில் தட்டுகளை கழுவுவதும், டாய்லெட் கழுவுவதற்கு நான் ஆளில்லை . அதேபோல் கேமரா முன் பொய்யாக நின்று சண்டை போடுவது எனக்கு பிடிக்காத ஒன்று எனவே இந்தமாதிரி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.