90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் லைலா.  அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' சூர்யாவுடன் 'பிதாமகன்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். 

திருமணத்திற்கு பின் முழுமையாக திரியாவுலகை விட்டு விலகிய  லைலா நீண்ட இடைவெளிக்கு பின் 'அலிசா' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த லைலா, இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருப்பதால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது,  இந்த படத்தில் லைலா நடிக்க உள்ள கதாப்பாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லைலா... பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் படத்திலேயே இவர் மிரட்டலான வேடத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மேலும் பிக் பாஸ் ரைசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் சந்துரு இந்த படத்தை இயக்கவுள்ளார். 
யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவும், அர்ஜூனா நாகா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.