'பிக் பாஸ்’ ரைசா வில்சன் படத்தில் கமிட்டான லைலா!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 1-யில் கலந்து கொண்ட பிறகு ரைசா வில்சனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. இதனையடுத்து ரைசா, ஹரீஷ் கல்யாணின் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ரைசா வில்சன் கால்ஷீட் டைரியில் ஜி.வி.பிரகாஷ் குமார் படம் மற்றும் ‘ஆலிஸ்’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இதற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை யுவன் ஷங்கர் ராஜாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.