90களில் அஜித், சூர்யா, விக்ரம், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லைலா.  தமிழ், மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கினார். தற்போது வரை இந்த கண்ணா குழி நடிகையின் சிரிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

10 வருடங்கள் கதாநாயகியாக திரையுலகத்தில் வளம் வந்த இவர், 2006  ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு முழுமையாக விலகினார்.  பின் குடும்பம் குழந்தை என இருந்த இவர், தற்போது மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 

இவரை வெள்ளித்திரையில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் அணுகிய போதும், நடித்தால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் கதையில் தான் நடிப்பேன்... அண்ணி, அக்கா போன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என கூறி பல வாய்ப்புகளை மறுத்து விட்டார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் இயக்க உள்ள படத்தில் ரீ-என்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுவரை தன்னுடைய மகன்களின் புகைப்படம் எதையும் வெளியிடாமல் இருந்த லைலா,  முதல் முறையாக தன்னுடைய 2 மகன்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.