"அய்யா" முதல் "தர்பார்" வரையிலான நயன்தாராவின் திரைப்பயணம் அசத்தலானது. அழகில் மட்டுமல்லா அசராத நடிப்பிலும் ரசிகர்களை கட்டிப்போடுபவர் நயன்தாரா. காதல், துரோகம் என அனைத்தையும் கடந்த நயன்தாரா இன்று ரசிகர்களால் "லேடி சூப்பர் ஸ்டார்" என கொண்டாடப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு வருகிறார் நயன்தாரா. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள "தர்பார்" படத்தின் பர்ஸ்ட் சிங் நேற்று வெளியாகி சோசியல் மீடியாவில் மரண மாஸ் காட்டி வரும் நிலையில், விளம்பர படத்திற்காக நயன்தாரா எடுத்த புகைப்படங்கள் ஒருபுறம் தீயாய் பரவி வருகின்றன. 

விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கொள்கை கொண்டிருந்த நயன்தாரா, தனது கொள்கைகளை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கத்ரீனா கைஃப்பின் அழகு சாதன விளம்பரத்திற்காக நயன்தாரா எடுத்த போட்டோ ஷூட் சோசியல் மீடியாவை அதிரவைத்தது. இந்நிலையில் தற்போது நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வருகிறார் நம்ம லேடி சூப்பர் ஸ்டார். 

சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்திற்காக சிம்பிள் அண்ட் க்யூட் லுக்கில் நயன்தாரா பங்கேற்ற போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பழைய பட ஹீரோயின்களை நினைவுபடுத்தும் விதமாக நீண்ட கை ஜாக்கெட், பெரிய பார்டர் பட்டுப்புடவை, கொண்டை, சிம்பிள் மேக்கப் என அழகு சிலையாக ஜொலிக்கும் நயனின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள செய்துள்ளது.