சென்னை டைம்ஸ் இதழ் ஆண்டு தோறும் மக்களால் விரும்பப்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 2019ம் ஆண்டில் அதிகம் விருப்பட்ட ஆண்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் முதலிடம் பிடித்துள்ளார். அந்த பட்டியலில் அனிருத், சிம்பு, தனுஷ், கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ், நடிகர் விக்ரம் மகன் துருவ், ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் போட்டியாளர்கள் முகென், தர்ஷன், கவின் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.  இந்த பட்டியலில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களான விஜய், அஜித் இடம் பிடிக்காதது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதையும் படிங்க:  "எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

அதிலிருந்து ரசிகர்கள் மீண்டு வரும் முன்பே அடுத்த பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். ஆம், மக்களுக்கு விருப்பமான பெண் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு 4வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ரசிகர்களின் மனதில் ராணியாக வலம் வருகிறார். ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயனுக்கு இந்த நிலைமையா? என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: புதுமையாக சேலை கட்டி... அசத்தலாக போஸ் கொடுத்த நிறைமாத கர்ப்பிணி ஆல்யா மானசா...வைரலாகும் போட்டோஸ்...!

இந்த பட்டியலில் மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்த அதிதி ராவ் முதலிடத்தில் உள்ளார். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற படத்தில் அறிமுகமான அதிதி ராவ், தமிழில் குறைவான படங்களை மட்டுமே நடித்துள்ள போதும், அவரது திறமையான நடிப்பால் முதலிடம் பிடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் 2வது இடத்திலும், அமலா பால் 3வது இடத்திலும், தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் 5வது இடத்திலும் உள்ளனர்.