பிகில் கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய லேடி சூப்பர் ஸ்டார்...! சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!

அட்லீ இயக்கத்தில் கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் ஏராளமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ரூ.180 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம், 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் கால் பந்தாட்டம் ஆடுவதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிகில் திரைப்படம், பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கால்பந்தாட்ட பயிற்சியாளராக விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில், ஏராளமான இளம் பெண்கள் நடித்திருந்தனர். பிகில் புட்பால் அணிக்கு கேப்டனாக நடித்தவர் அம்ரிதா ஐயர். இவர் 2018ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவான படை வீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர். பிகில் திரைப்படத்தில், அம்ரிதா ஏற்று நடித்த தென்றல் கதாபாத்திரம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. தனது நடிப்பால் கவரப்பட்ட நயன்தாரா, வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளதாக அம்ரிதா ஐயர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா இந்த பரிசை தனக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதில் நயன்தாராவுடன் அம்ரிதா ஐயர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

சக நடிகைகளின் நடிப்பை பாராட்டும் பழக்கம் பாலிவுட் நடிகைகளிடம் மட்டுமே இருந்து வந்த நிலையில், அதனை தற்போது கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்துள்ளார் நயன். சமீபத்தில் தனது விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்காக லேடி சூப்பர் நயன்தாராவை, கேத்ரீனா கைப் டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருந்தார். அப்போது இருவரும் விளம்பர படங்களில் நடித்த புகைப்படங்கள் செம வைரலாகின. அதேபோல இளம் நடிகையான அம்ரிதாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ள நயன்தாராவின் தாராள மனதிற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.