கடந்த டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 24 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 170,498 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 24,81,253 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 6,46,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி வரும் நாடுகளுக்கு அந்தந்த நாட்டைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிய கோடிகளில் நிதியை வாரி வழங்கி வருகிறது. 

இதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

இந்நிலையில் ஹாலிவுட் இசை உலகின் பிரபலங்கள் ஆன்லைன் மூலமாக "ஒன் வேல்டு" என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்டியுள்ளனர். இதில் ஆஸ்கர் விருது வென்ற பிரபல பாடகி லேடி காகா, ஸ்டீவி வொண்டர், எல்டன் ஜான், பால் மெக்காட்னி, பில்லி எலீஸ், கமிலா காபெல்லோ, ஷான் மெண்டிஸ் உள்ளிட்டோர் தங்களது வீட்டில் இருந்த படியே பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி பிபிசி தொலைக்காட்சி மூலம் பிரிட்டன் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. 

இதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!

2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கண்டு களித்தனர். குளோபல் சிட்டிசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி மூலமாக 129.9 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.980 கோடி நிதி திரட்டப்பட்டது. உலக சுகாதார அமைப்பிற்கு உதவுவதற்காக இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த நிதி மொத்தமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காக்க போராடும் மருத்துவத்துறை ஊழியர்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி இன்டர்நெட்டில் 8 மணி நேரத்திற்கு ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.