சமந்தா,நயன்தாரா என இரு நாயகளிடன் சிங்கிள் நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் வெளியாகியுள்ளது.
நானும் ரவுடிதான் விக்கி :
விஜய் சேதுபதி -நயன்தாராவின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த நானும் ரவுடிதான் படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவன். முதல் படமே வெற்றி பெற்ற இவர் மீண்டும் இந்த கூட்டணியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். தனது சொந்த பேனரில் தயாராகும் இந்த படம் குறித்த அப்டேட் வெளியான வண்ணம் உள்ளது. இதில் சமந்தாவும் நாயகியாக நடித்துள்ளார்.இவர் சிம்புவின் போட போடி, தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஹிட் அடித்த பாடல்கள் :
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது. இதோடு இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் செம ஹிட் கொடுத்தது.

நயன்தாரா - சமந்தா க்யூட் வீடியோ :
இற்கிடையே இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பின் போதும் நயன்தாராவின் பிறந்தநாளின் போதும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. அதோடு படத்தில் தான் நடித்த சீனை பார்த்து நயன்தாரா வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர் :
இரு பிள்ளைகளுக்கு தாயான நயன்தார ஒருபுறமும், சமந்தா மறுபுறமும் என இருவரை காதலிக்கும் நாயகன் இறுதியாக யாரை கைப்பிடிப்பார் என்னும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்திலிருந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

