kuthu ramya admited the hospital

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா.

கன்னட நடிகையான இவர் தமிழில், குத்து, சிங்கம் புலி, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பெயர்பெற்றவர். அதே போல் கன்னடத்தில் முன்னணி நாயகியாகவும் இருந்தவர். பின் காங்கிரஸ் அணியில் இணைத்து பணியாற்றி எம்.பியாகவும் ஆனார்.

தற்போது அரசியல் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டி வரும் ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா சாப்பிட்ட உணவு புட் பாயிஸானாக மாறியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பார்க்க காங்கிரஸ் அணியை சேர்த்த பலர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர் . அதே போல் பல பிரபலங்களும் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர்.