தன்னுடைய பாடல் வரிகள் மூலம் மிகவும் பிரபலமான பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கள் தமிழ் திரையுகில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.  மேலும் இது ஒரு விவாதமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், சின்மயின் இந்த பாலியல் புகார் குறித்து...  நடிகை குஷ்பு பிரபல செய்தி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை கூறி சின்மயிக்கு சப்போர்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... "சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பேசியதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அதேபோல் அவர் இத்தனை  வருடங்கள் கழித்து பேசியதும் தவறு இல்லை. சின்மயி இத்தனை வருடங்களுக்கு பின்னராவது தைரியமாக இதுபற்றி பேசியுள்ளதை நிச்சயம் பாராட்ட வேண்டும்". 

அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து அவர்கள் மறுத்து தெரிவித்துள்ளார். அதனால் அவரின் விளக்கம் கொடுக்க அவகாசம் கொடுக்க வேண்டும்.  உண்மை என்பதை தெரிந்து கொண்ட பின்னரே இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும் என கூறினார்.

மேலும் நான் திமுகவில் இருந்தபோதும் சரி, திரையுலகை பொருத்தவரையிலும் சரி,  நான் பார்த்தவரை  வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர். அவர் கலைஞர் கருணாநிதியின் நணபர் என கூறி எந்தவித மிரட்டலும், அத்துமீறலையும் செய்தது இல்லை' என கூறியுள்ளார்.