kushoo tweet

பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு தற்போது கணவர் மற்றும் மகள்களுடன் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக, வெளிநாடு சென்றுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், தன்னுடைய சமூகவலைத்தளத்தில் வெனிஸ் நகரில் உள்ள கொண்டோலில் என்ற கால்வாயில் படகு சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். 

இரண்டு பக்கமும் பழமையான கட்டிடங்கள் நடுவில் தண்ணீரில் படகு சவாரி செய்யும் இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதே லொகேஷனில்தான் அமிதாப்பச்சன், ஜீனத் அமன் நடித்த பாடல் காட்சி ஒன்று 'தி கிரேட் காம்ப்ளேர்' என்ற படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கும். 

இருவரும் படகு சவாரி செய்தவாறு பாடிய இந்த பாடல் புகழ்பெற்றது. இந்த பாடலில் வரும் ஜோடியை போலவே தானும் தன்னுடைய ஜோடியுடன் இதே இடத்தில் படகு சவாரி செய்ய வேண்டும் என்ற தனது கனவு 22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறைவேறியுள்ளது என்று குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் குஷ்பு தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் செல்பி புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்