kushboo talk with troll persons

சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கு சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு களமாகவும் உள்ளது. 

குறிப்பாக டுவிட்டரில் ட்ரோல் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வெறும் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட இந்த ட்ரோல் நாளடைவில் சம்பந்தப்பட்டவர்களின் மனம் புண்படும் அளவிற்கு மாறிவிட்டது. குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்களின் ட்ரோல் எல்லை மீறும் அளவிற்கு உள்ளது.

இந்த நிலையில் ட்ரோல் செய்பவர்கள் குறித்து நடிகையும் அரசியல்வாதியும் குஷ்பு தனது டுவிட்டரில் காட்டமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

'பொதுவான நான் ட்ரோல் செய்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் சில சமயங்களில் அவர்கள் மொழியிலே அவர்களுக்கு பதிலடி கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று கருதுவேன் என்று கூறிய குஷ்பு பல மணி நேரம் டுவிட்டரில் ட்ரோல் செய்பவர்களுடன் மல்லுக்கட்டினார். 

பின்னர் கடைசியாக 'இந்த முட்டாள்கள் குரைத்து கொண்டேதான் இருப்பார்கள், இது இயற்கை. அவர்களை திருத்தவே முடியாது. நாம் நம் வேலையை பார்ப்போம்' என்று இந்த பிரச்சனையை முடித்து கொண்டார்.