நடிகை குஷ்பு வீட்டில் இன்று பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கூடி, குஷ்பு - சுந்தர்.சியின் இளையமகள் அனந்திதாவின், 17 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தற்போது இது குறித்த, புகைப்படத்தை நடிகை குஷ்பு சந்தோஷத்துடன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவர் பதிவிட்டுள்ள பதிவில்,  "மகிழ்ச்சி என்றால் குடும்பம் மற்றும் நண்பர்கள்..செலிபிரேஷன் என்றால் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருப்பது.. அனந்திதா சுந்தர் பிறந்தநாள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது என கூறி, புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

அதில் நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி மற்றும் மகனுடன் உள்ளார். அதே போல், ஹிப் ஹாப் ஆதி, மற்றும் குடும்ப நண்பர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து குஷ்புவின் மகளுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.