தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைகிறது .இதனையடுத்து பிப்ரவரி 5–ந் தேதி சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது . இதில் விஷால் அணி சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். மற்றொரு அணியில் டைரக்டர் டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன், டைரக்டர் திருமலை ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டு இருப்பது தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார் . அதில் ‘‘விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஷால் மற்றும் அவரது அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் அணி  வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்றும் வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது எனவும் மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம்.’’  என குஷ்பு மேலும் தெரிவித்துள்ளார்.