ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சினிமா பிரபலங்கள் பலரும் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமான அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சினிமா பிரபலங்கள் பதிவிட்டுள்ள பதிவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளம் மூலம் ஹீராபெனுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கங்கனா, “இந்த கடினமான நேரத்தில், பிரதமருக்கு கடவுள் பொறுமையையும் அமைதியையும் வழங்கட்டும், ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளதாவது : “நமது பிரதமர், நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தாயை இழந்து தவிக்கும் வலியை வார்த்தைகளால் ஆற்ற முடியாது. ஒரு இந்தியனாகவும், ஒரு தாயாகவும், பிரதமரின் துக்கத்திலும், வலியிலும் நான் அவருடன் துணை நிற்கிறேன். அவரது இழப்புக்கு தேசமே இரங்கல் தெரிவிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கண்ணீர்மல்க தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி - கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ
நடிகையும், ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, பிரதமர் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது : “பிரதமர் நரேந்திர மோடியின் அன்புத் தாயார் ஹீராபென் மோடி அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட்டும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “மதிப்பிற்குரிய மோடி ஜி, உங்கள் தாய் எங்கும் செல்லவில்லை, அவர் எப்போதும் உங்களுடன் தான் இருந்தார், இனியும் உங்களுடன் தான் இருப்பார். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.
இதுதவிர நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அனுபம் கேர் ஆகியோரும் மோடியின் தாயார் மறைவுக்கு டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு
