பத்திரிகையாளர்கள், குறிப்பாகப் புகைப்படக்கலைஞர்கள் யாரும் அழைக்கப்படாமல் நடந்த குறளரசன் - நபீலா அகமது திருமணம் தொடர்பாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மணமகள் வீட்டார் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

பத்திரிகையாளர்கள், குறிப்பாகப் புகைப்படக்கலைஞர்கள் யாரும் அழைக்கப்படாமல் நடந்த குறளரசன் - நபீலா அகமது திருமணம் தொடர்பாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மணமகள் வீட்டார் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த குறளரசன், கடந்த பிப்ரவரி 16ம் தேதி தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இத்திருமணத்துக்கு தமிழக முதல்வர் முதல் பல்வேறு வி.ஐ.பி.களுக்கு பத்திரிக்கை வைத்த டி.ராஜேந்தர் அவருக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகையாளர்கள் உட்பட யாரையுமே அனுமதிக்கவில்லை.

யாரும் நபீலா அகமதுவை படம் எடுக்ககூடாது என கடுமையான கட்டுப்பாடுடன்தான் குறளரசன் -நபீலா அகமது காதல் திருமணம் மணமகளின் இல்லத்தில் நடந்தது.இதற்காகவே குறளரசன் இஸ்லாம் தழுவினார்.குறிப்பிட்ட நண்பர்கள்,உறவுகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த எளிமையான திருமணத்தில் மதச்சடங்குகளில் மணமக்களின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.நெருங்கிய உறவுகள் அனுமதிக்கப்பட்டனர். திருமணத்துக்கு வந்த உறவினர்களும் செல்ஃபோனில் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.

உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.குறளரசன் நபீலாவின் திருமண வரவேற்பு திரையுலகினர் சூழ இன்று 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது.