Kuberaa vs Leo Box Office Collection : தனுஷின் குபேரா படமானது விஜய்யின் லியோ படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.
குபேரா:
Kuberaa vs Leo Box Office Collection : இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படம் தான் குபேரா. இது தனுஷின் 2ஆவது தெலுங்கு படம். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 20ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பேன் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் ஒரு பிச்சைக்காரை நாமினாக்கி அவர்கள் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு அவர்களை கொலை செய்யும் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருந்தார்.
குபேரா கதை
அதன் பிறகு அவரை பணக்காரராக மாற்றி ஒரு கம்பெனிக்கு சிஇஓ ஆக்கி கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்க முயற்சித்தனர். அவர்களிடமிருந்து தனுஷ் தப்பிக்கும் கதை தான் இந்தப் படம். இதற்கு முன்னதாக தனுஷின் கெட்டப் போன்று ரஜினிகாந்த் முத்து படத்தில் ஒரு கெட்டப்பில் நடித்திருந்தார். அந்தப் படமும் கேமியோ தான். அதே போன்று தான் குபேரா படத்தில் தனுஷ் வரும் பிச்சைக்கார கெட்டப்பும் கேமியோ. ஒரு சில காட்சிகளுக்கு பிறகு தனுஷின் கெட்டப், நடை உடை பாவனை எல்லாமே மாறிவிடும்.
ராஷ்மிகா மந்தனா
மேலும், இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தார். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் அவர் படத்தில் வருகிறார். படம் ஆரம்பித்தது முதல் நாகர்ஜூனா மற்றும் தனுஷ் இருவர் மட்டுமே படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். படத்தின் இறுதியில் செண்டிமெண்ட் காட்சியை வைத்து ரசிகர்களை கவர்ந்துவிடலாம் என்று திட்டமிட்ட இயக்குநர் சேகர் கம்முலாவிற்கு இந்தப் படம் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம்.
குபேரா விமர்சனம்
குபேரா எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. படம் வெளியாகி 3 நாட்கள் கடந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வசூல் குவித்துள்ளது. அதோடு உலகளவில் ரூ.85 கோடி வசூல் குவித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் ரூ.39 கோடி வசூல் குவித்து விஜய்யின் லியோ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் மொத்தமாக ரூ.38 கோடி மட்டும் வசூல் குவித்திருந்தது. ஆனால் லியோவின் வசூலை வெறும் 3 நாட்களில் குபேரா படம் முறியடித்துள்ளது.
