KS Ravikumar said that he does not have a salary for the film.
“பள்ளி பருவத்திலே” என்ற படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளம் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
வாசுதேவ் பாஸ்கர் தற்போது இயக்கிவரும் படம் ‘பள்ளி பருவத்திலே’. இந்தப் படத்தில் சிற்பியின் மகன் நந்தன்ராம் ஹீரோவாகவும், வெண்பா ஹீரோயினியாகவும் நடிக்கின்றனர்.
மேலும், படத்தில் ஆர்.கே.சுரேஷ், தம்பி ராமய்யா, பொன்வண்ணன், ஊர்வசி, சுஜாதா உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்திற்காக தான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர், “தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்லாம்பட்டு கிராமத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசியரியாக ஒருவர் இருந்தார். 100 பேர் படித்த பள்ளியை அவர் இரண்டாயிரம் பேர் படிக்கும் பள்ளியாக மாற்றினார். நல்லாசிரியர் விருதும் பெற்றார்.
அந்த ஆசிரியர் கதபாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவர் கே.எஸ்.ரவிகுமார் என்ற முடிவு செய்து அவரிடம் கதை சொன்னேன். கதை பிடித்து நடித்துக் கொடுத்தார்.
அந்த கேரக்டரும், அதை நான் படமாக்கிய விதமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் என்னை அழைத்து “இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும், தேசிய விருதும் வாங்கும். எனக்கு சம்பளம் வேண்டாம்” என்று கூறிவிட்டுச் சென்றார்” என்று அவர் தெரிவித்தார்.
