பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி, கிருத்திகா உதயநிதி இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில்... தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகன் - நாயகி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி, கிருத்திகா உதயநிதி இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில்... தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகன் - நாயகி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: கருப்பு நிற ஹாட் உடையில்... நீச்சல் குள புகைப்படம் வெளியிட்ட பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ்!

கிருத்திகா உதயநிதி, ஏற்கனவே 'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களோடு மொதலுக்கு மோசம் இல்லாதது போல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்தது. இந்த இரு படங்களை தொடர்ந்து, மூன்றாவதாக கிருத்திகா உதயநிதி ஒரு படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலில். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் கமிட் ஆனதாகவும் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மூன்றாவது படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்னும் பெயரிடாத இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் ஹீரோவாக, பிரபல வாரிசு நடிகர் காளிதாஸ் ஜெயராமன் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: வாத்தி கம்மிங் பாடலின் வேற லெவல் சாதனை... ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்..!

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கிருத்திகா உதயநிதி அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.