விஜய் டிவி பிரபலம் பாலா, மாற்றுத்திறனாளி ஒருவருக்காக தன் சொந்த செலவில் பைக் வாங்கி கொடுத்திருப்பதற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தன்னுடையை டைமிங் காமெடிகளால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியின் டாப் டக்கர் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய பாலா, அதில் அடுக்குமொழியில் பேசி அசர வைத்ததோடு, குக்குகளுக்கும் தீயாய் வேலை செய்து அனைவரது பேவரைட் கோமாளியாக திகழ்ந்தார். இதையடுத்து பாலாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர் மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கி கலக்கினார். அதுமட்டுமின்றி சினிமா இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் பாலா. இப்படி சின்னத்திரையில் செம்ம பிசியாக வலம் வரும் பாலா, தான் சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் ‘இசை இளவரசன்’ யுவன் சங்கர் ராஜாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

முதியோர் இல்லத்திற்கு உதவுவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதுமட்டுமின்றி மக்களின் மருத்துவ வசதிக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து வருகிறார். இதுவரை 5 ஆம்புலன்ஸ் அவர் தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல், தன்னால் முடிந்தவற்றை செய்து வருகிறார் பாலா.

அந்த வகையில் எம்சிஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவர் பைக் இல்லாததால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை அறிந்த பாலா, அவருக்கு தன் சொந்த செலவில் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல், அதை வீட்டுக்கே சென்று டோர் டெலிவரியும் செய்துள்ளார். பாலா செய்த இந்த பேருதவியால் எமோஷனல் ஆன அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், கண்ணீர்மல்க காலில் விழுந்தது காண்போரை கலங்க செய்துள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View post on Instagram

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனை மெர்சலாக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்... படக்குழுவை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்