CWC Bala : குக் வித் கோமாளி பாலாவுக்கு என்னாச்சு... நள்ளிரவில் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரல்

Cook with comali Bala instagram viral video : ரோட்டோரம் உள்ள பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து அங்கு சுற்றித்திரிந்த நாயுடன் பேசியபடி குக் வித கோமாளி பிரபலம் பாலா சாப்பாடு சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

KPY and Cook with comali fame bala eating dinner on roadside busstand

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. இந்நிகழ்ச்சியில் இவர் செய்யும் ரைமிங் காமெடிகள் மக்களிடையே பிரபலமானதால் அடுத்தடுத்து பல்வேறு ரியாலிட்டு ஷோக்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் பேமஸான காமெடியனாக வலம் வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலி அவார்ட்ஸ் எனும் நிகழ்ச்சியில் பாலாவுக்கு சிறந்த காமெடியன் விருது கிடைத்தது.

அப்போது பாலாவின் எமோஷனலான மறுபக்கமும் வெளிவந்தது. இவர் நிகழ்ச்சி மூலம் தான் சம்பாதித்த பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக செலவிட்டு வருவதை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தன் சொந்த செலவில் படிக்க வைப்பதே தனது லட்சியம் என்றும் அப்போது பாலா தெரிவித்திருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bj Bala (@bjbala_kpy)

பாலாவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஏற்கனவே இரண்டு சீசன்களில் கலக்கிய அவர் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது சீசனிலும், தனது டைமிங் காமெடிகளை ரைமிங்காக சொல்லி அனைவரையும் அசரவைத்து வருகிறார். இதுதவிர படங்களிலும் நடித்து வருகிறார் பாலா.

இவ்வாறு பிசியானவராக வலம் வரும் பாலா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதில் ரோட்டோரம் உள்ள பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து அங்கு சுற்றித்திரிந்த நாயுடன் பேசியபடி இரவு உணவை அருந்துகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது எளிமையை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Director Hari :பிரஸ் மீட்டில் திடீரென கெட்டவார்த்தை பேசி ஜெர்க் கொடுத்த இயக்குனர் ஹரி.. ஆடிப்போன யானை படக்குழு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios