ஒரு குருவி கூடுக்காக 35 நாட்கள் கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராமம் குறித்து... கூடு திரைப்படம் பேச வருகிறது. 

ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தை தழுவி தயாராகும் திரைப்படம் "கூடு" இத்திரைப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார் கதை திரைக்கதையை டேவிட் வில்லியம்ஸ் எழுத, M கணேஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரு கூடுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த படத்தின் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் பற்றி தற்போது படக்குழு கூறியுள்ள இந்த தகவலே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் இப்படத்தை மனிதநேயத்தின் உச்சம் என கூறி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.