Asianet News TamilAsianet News Tamil

'ஆதாம் - ஏவாளாக' மாறிய ஜெயம் ரவி - காஜல்!

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் புரொமோஷனுக்காக வித்தியாசமான புகைப்படங்களை, படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.  .
 

komali movie new look
Author
Chennai, First Published May 25, 2019, 6:48 PM IST

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் புரொமோஷனுக்காக வித்தியாசமான புகைப்படங்களை, படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.  .

சமீபத்தில் ஒரு நோயாளி போல் உடை அணிந்து, கையில் குளுக்கோஸ் ஏறி கொண்டிக்கும் புகைப்படம் வெளியானது. பின் புலிபோல் உடை அனைத்தும், கலர் ஃபுல் உடையிலும் புகைப்படங்கள் வெளியானது.

komali movie new look

இந்நிலையில், தற்போது ஆதாம் - ஏவாள் போல் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் தலைப்பில் 1990,2000,2005,2010,2013,2016 போன்ற ஆண்டுகள் இடம்பெற்றிருந்ததால். தலைப்பில் இடம்பெற்றுள்ள ஆண்டுகளில் இந்த படத்தில் நிகழும் சம்பவங்களை வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், ஆதாம் ஏவாள் காலத்திற்கே சென்று ஜெயம் ரவி நடித்துள்ளார் என்பது போஸ்டர் மூலம் தெரிகிறது.

komali movie new look

காஜல் அகர்வாலை தவிர,  சம்யுக்தா ஹெட்டே , கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை,  இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios