நடிகர் ஜெயம் ரவி, 'தனி ஒருவன்' படத்திற்கு பின், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக 'அடங்க மறு' திரைப்படம் வெளியானது. 

நடிகர் ஜெயம் ரவி, 'தனி ஒருவன்' படத்திற்கு பின், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக 'அடங்க மறு' திரைப்படம் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி, நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'கோமாளி'. நீண்ட வருடமாக கோமாவில் இருக்கும் ஒருவர், கோமாவில் இருந்து மீண்டதும், அவர் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார் இதனால், வரும் பிரச்சனைகள் என்ன என்பதை காமெடியாக இயக்கியுள்ளார் கார்த்திக் தங்கவேலு.

இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, ஷாரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேற்றைய தினம் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழக வசூல் ஒரு நாளில் மட்டும் ரூ.5.46 கோடி என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான ஜெயம்ரவி படங்களில் அதிக வசூல் செய்தது இந்த படம் தான் என கூறப்படுகிறது.