ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், தற்போது அடுத்த அவதாரத்திற்கு தயாராகிவிட்டார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வல், கே.எச்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான படம் கோமாளி. 90’ஸ் கிட்ஸ்களின் நினைவலைகளை தூண்டிவிட்ட இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் ஹீரோ அவதாரத்தையும் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்திற்கான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அவதாரம் எடுக்கும் ரங்கநாதனுக்கு அவரது நலம் விரும்பிகள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.