* விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து செம்ம ஃபேமஸ் ஆனவர் ஷாலினி பாண்டே. அவரை தமிழ் திரையுலகம் லேசாக கவனிக்க துவங்கியது. கொரில்லாவில் நடித்தார், பட் ஊத்திக்கிச்சு. இப்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்தார். ஆனால் கால்வாசி ஷூட்டான நிலையில் கழன்று கொண்டார்.  நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வோம்! என தயாரிப்பு தரப்பு சொன்னபோது ‘எனக்கு எப்படியெல்லாம் டார்ச்சர்(?!) கொடுத்தாங்கன்னு எவிடென்ஸ் இருக்குது. கோர்ட்ல அத்தனையையும் சொல்வேன்’ என்றாராம். 

* ஆந்திராவில் அதிரடி பண்ணிவிட்டு, கோடம்பாக்கத்தில் வந்து செட்டிலாகி விஷால் முதல் சில ஹீரோக்களை தெறிக்க விட்டு வருபவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. அம்மணி அவ்வப்போது செம்ம செக்ஸியான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களின் இதயம் பிளஸ் இத்யாதி பாகங்களை ரவுசாக்கிவிடுவார். அந்த வகையில் இப்போது பாத்ரூம் செல்ஃபி ஒன்றை போட்டிருக்கிறார். தாங்காதுடா சாமி! எனும் லெவல். 


* ஹீரோ படத்தின் கதை திருடப்பட்டது! என்று ஒரு பஞ்சாயத்து உருவானதில்லையா. இதில் ஆராய்ச்சி நடத்தியபின்,  புகாரை கிளப்பியவருக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கினார் கே.பாக்யராஜ். இதற்கு இயக்குநர் மித்ரன் செம்ம எதிர்ப்பை காட்டி, சில கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். இதற்கு சில முக்கிய இயக்குநர்கள் ஆதரவாக கை தூக்கியுள்ளனர். அநேகமாக கூடிய விரைவில் பாக்யராஜ் தன் பதவியை ராஜினாமா செய்யலாமாம்!

* அஜித்தை வைத்து அமர்க்களமான படம் தயாரித்தவர்களில் ஏ.எம்.ரத்னமும் ஒருவர். பதிலுக்கு அஜித்தும் நன்றிக்கடனை மிக சரியாக தீர்த்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அஜித்தை புக் செய்ய நினைத்து அணுகினாராம் ரத்னம். ஆனல் ‘நோ-ன்னா நோ! தான்’ என்று சொல்லிவிட்டாராம் தல. காரணம், பழைய பட விஷயத்தின் பண விவகாரம்தான். 

*கற்றது தமிழ்! படத்திலிருந்து தமிழ் சினிமாவில் நல்ல பெயருடன் வலம் வருபவர் அஞ்சலி. இப்போதைக்கு சொல்லிக் கொள்ளும்படி ஒரு படமும் இல்லை என்றாலும், அவருக்கென்று ரசிகர்கள் மனதில் ஒரு இடம் இருக்கிறது. தனது தோழியுடன் அவுட்டிக் ரெசார்ட் ஒன்றில் தங்கியிருந்து, செம்ம ஜாலியாக அஞ்சலி எடுத்து போட்டிருக்கும் சில போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. எந்த கவர்ச்சி, செக்ஸி, கிளாமர் தன்மையுமில்லாமல் பொண்ணு செம்ம க்யூட்டாக போட்டோ போட்டிருப்பது அழகு.