Actress Samantha : நீண்ட நாட்கள் கழித்து பிரபல நடிகை சமந்தா தனது சொந்த ஊரான சென்னைக்கு ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரை உலகில் களமிறங்கிய வெறும் 13 ஆண்டுகளில் உச்ச நடிகைகளின் பட்டியல் இணைந்த நடிகை தான் சமந்தா. கடந்த 2019 வெளியான நடிகர் சிம்புவின் "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து இவர் திரை உலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மாற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து வருகின்றார் சமந்தா. 

இந்த சூழலில் தான் சமந்தாவிற்கு அரிய வகை நோய் ஒன்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. தன்னுடன் முதல் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். 

விரைவில் வெளியாகும் "நினைவெல்லாம் நீயடா" தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார் கொடுத்த மனிஷா யாதவ் - என்ன அது?

அந்த மன வேதனையில் இருந்து வந்த சமந்தா, தனக்கு இருக்கும் அந்த நோய்க்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த வந்தார். மேலும் கடந்த சில மாதங்களாகவே தனது சொந்த ஊரான சென்னைக்கு வராமல் ஹைதராபாதில் தனது தாயோடு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சாம், இப்போது சென்னைக்கு மீண்டும் வந்துள்ளார். 

View post on Instagram

சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க, வெகு நாட்கள் கழித்து தனது சொந்த ஊரான சென்னைக்கு திரும்ப வந்திருக்கிறார். சென்னையில் இருக்கும் பல்லாவரம் தான் சமந்தா பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். 

Suhani Bhatnagar Death: 'தங்கல்' படத்தில் அமீர் கானின் ரீல் மகளாக நடித்த 19 வயது நடிகை சுஹானி பட்னாகர் மரணம்!