ஐஏஎஸ் பரீட்சை.. மூன்று முறை தற்கொலை முயற்சி.. கணவரை பிரிய இதுவே காரணம் - மனம் திறந்த நடிகை ரேகா நாயர்!

Rekha Nair : சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி, இன்று வெள்ளித்திரை நாயகியாக மாறி உள்ள நடிகை தான் ரேகா நாயர். பல போல்டான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood Actress Rekha Nair Opens up about her divorce ans

ரேகா நாயர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஆண்டாள் அழகர்" என்கின்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர். அதன் பிறகு வெள்ளி திரையில் இப்பொழுது நடிக்க துவங்கியுள்ளார்.

குறிப்பாக பிரபல இயக்குனர் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற "இரவின் நிழல்" என்கின்ற திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவப்பொழுது இவருடைய சர்ச்சையான பேச்சுக்களுக்காக இவர் அறியப்படுகிறார்.

ஆபாச உடையில் ராஷ்மிகா; வைரலாகும் வீடியோ! கடும் நடவடிக்கை எடுக்க சொன்ன அமிதாப்பச்சன்!!

இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். மேலும் தன் முதல் கணவரை அவர் ஏன் பிரிந்தார் என்பது குறித்த தகவலையும் அவர் இப்பொழுது வெளியிட்டுள்ளார்.

Actress Rekha Nair

ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டு அதற்காக தேர்வு எழுத டெல்லி சென்ற பொழுது, அவருடைய சான்றிதழ்களை அவருடைய கணவர் கிழித்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற அவர் மூன்று முறை தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகவும் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு தன்னுடைய சர்டிபிகேட் கிழிக்கப்பட்டதை ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டு, தொடர்ச்சியாக நிறைய டிகிரிகளை அவர் படிக்க துவங்கியதாக அவர் கூறியுள்ளார். 

அடுத்த பலி ஆடு இவர்தானா! பிரதீப்பை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து தூக்க பிளான் போடும் மாயா

தன் கணவர் தனது சான்றிதழை கிழித்த அன்றே தற்கொலைக்கு முயன்று தான் இறந்திருந்தால், அவர் யார் என்று யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் என்றும், ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து நிரம்ப படித்து இன்று திரை துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இன்று சிலருக்கு தன்னை அடையாளம் தெரிகிறது என்றும் பெருமிதத்தோடு கூறியுள்ளார் ரேகா நாயர். நான் என் மனதில் பட்ட உண்மைகளை மட்டும் பேசுகிறேன் அதனால் பலர் என் பேச்சைக் கேட்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios