வெற்றியும் இல்ல.. கார்த்தியும் இல்ல.. தளபதி 69 படத்தை இயக்கப்போவது வேற ஒரு இயக்குனராம் - தினம் ஒரு தகவல்!
Thalapathy 69 : பிரபல நடிகர் விஜய், விரைவில் தனது கலைப்பயணத்திற்கு குட் பை சொல்ல உள்ள நிலையில், அவருடைய 69வது படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
விரைவில் இந்த திரைப்பட பணிகள் முடிய உள்ள நிலையில், இந்த திரைப்படத்தில் மறைந்த அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியாகி வருகின்றது. அதே நேரத்தில் அண்மையில் தளபதி விஜய் அவர்கள் தனது "தமிழாக வெற்றி கழகம்" கட்சியை மக்களுக்கு அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தனது 69 வது பட பணிகளை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் தளபதி விஜய் அவர்கள் ஈடுபட உள்ள நிலையில் அந்த திரைப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. முதலில் அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வந்தது.
பிறகு வெற்றிமாறன் தான் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் தற்பொழுது வெளியாகி உள்ள ஒரு புதிய தகவலின் படி பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அவர்கள் அந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் வெளியான மகேஷ்பாபுவின் "குண்டூர் காரன்" படத்தை இயக்கி, தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.