kollakudi karuppayi said no help needed celebrities help
நடிகர் பாண்டியராஜன் இயக்கிய ஆண் பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தது மட்டுமின்றி சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். திரைப்படங்களை விட நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான இவர் தற்போது வயதானதால் சினிமாவை விட்டு விலகி தனிமையில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரியில் மாணவர் அரவணைப்பு மையம் மற்றும் ஊடக மையம் ஆகியவை இணைந்து நடத்திய நாட்டுப்புற கலைஞர்களை கௌரவிக்கும் விழாவில் கலந்துகொண்ட இவர், முதல் முறையாக தன்னுடைய சோகப் பக்கங்களை செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய இவர், குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்ததாலும், பாடல்கள் பாடியதாலும் தன்னால் சினிமாவில் சொத்துக்கள் எதுவும் சேர்க்க முடியவில்லை. வாங்கிய பணம் அப்போதைய செலவிற்கே கழிந்து விட்டது. தற்போது எனக்கு சொந்தமாக என்று உள்ளது எப்போது விழும் என்று ஒவ்வொரு நாளும் என்னை அச்சப் படுத்தி வரும் ஒரு ஓட்டு வீடு தான். நடிகர் சங்கம் செயல்பாட்டால் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு விஷால் அறிவித்த 4,000 உதவித் தொகையை வைத்து வாழ்க்கையை பார்த்துக்கொள்கிறேன்.
என்னுடைய தூரத்து சொந்தத்தில் இருந்து ஒரு பேத்தி என்னை பராமரித்து வருகிறார். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடன் தான் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பலர் என்னிடம் சினிமா காரர்களிடம் உதவி கேட்கச் சொல்கின்றனர்... ஆனால் நான் எப்போதும் சினிமாக்காரர்களிடம் உதவி கேட்க மாட்டேன் என அடித்துக் கூறுகிறார் கொல்லங்குடி கருப்பாயி.
